வைரலாகும் விஜய்சேதுபதி-நயன்தாரா ஸ்டில்

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 12:45 pm

vijay-sethupathi-s-getup-in-imaikka-nodigal-revealed

'இமைக்கா நொடிகள்' படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேமியோ ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யாப், ராஷி கன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நயன்தாராவின் கணவராக நடிக்கிறார். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நானும் ரவுடி தான் படத்தில் அனைவரையும் கவர்ந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Advertisement:
[X] Close