'தமிழ் படம் 2'க்கு ஆல் கிளியர் கொடுத்தது சென்சார் போர்டு!

  Newstm News Desk   | Last Modified : 03 Jul, 2018 10:03 am

tamizh-padam-2-gets-u-certificate

மிர்ச்சி சிவா நடிப்பில், சிஎஸ் அமுதன் இயக்கியுள்ள பரோடி திரைப்படம் 'தமிழ் படம் 2'-விற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

2010ம் ஆண்டு, தமிழ் சினிமாவின் முதல் பரோடி படமான 'தமிழ் படம்' ரிலீசானது. மற்ற தமிழ் படங்களையும், தமிழ் சினிமா கலாச்சாரத்தையும் வச்சு செஞ்ச இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தின் இரண்டாம் பாகம், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியாக தயாராகி வருகிறது. 

ஏற்கனவே படத்தின் டீசர், நான் யாருமில்ல என்கிற பாடலின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் முதல் ரஜினிகாந்த் வரை யாரையுமே விட்டுவைக்காத தமிழ் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. தங்களது பாணியில் அதை கொண்டாட, பாகுபலியை கலாய்த்து புதிய யு சான்றிதழ் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் தயாரிப்பாளர்கள்.

படம் இந்த மாதம் வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் தயாராகட்டும். தமிழ் படத்தில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது...

Advertisement:
[X] Close