சுப்ரமணியபுரம் படத்தை புகழ்ந்த பிரபல பாலிவுட் இயக்குநர்

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 12:21 pm

anurag-kashyap-s-request-to-director-sasikumar

சுப்பிரமணியபுரம் படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான படம் சுப்பிரமணியபுரம். இது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக கருத்தப்படுகிறது. இப்படம் வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று இப்படத்தை புகழ்ந்து பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அதில், "இயக்குநர் சசிகுமார், நீங்கள் சுப்பிரமணியபுரம் என்னும் கிளாசிக் படத்தை கொடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது நீங்கள் நடிகர். நிறைய எதிர்ப்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது கேங்ஸ் ஆப் வாசிப்ஃபர் படத்திற்கு சுப்பிரமணியபுரம் தான் இன்ஸ்பிரேஷனாக இருந்தது எனவும் அவர் பதிவிட்டுள்ளார். 

Advertisement:
[X] Close