கெளதம் கார்த்திக்கிற்கு கை கொடுக்குமா ’மிஸ்டர் சந்திரமெளலி’?

  Bala   | Last Modified : 05 Jul, 2018 01:41 pm

in-300-theaters-mr-chandramouli

நாளை (ஜூலை 6) திரைக்கு வரும் ’மிஸ்டர் சந்திரமெளலி’ படம், தனக்கு கை கொடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார் நடிகர் கெளதம் கார்த்திக். 

அப்பா கார்த்திக்கும், மகன் கெளதம் கார்த்திக்கும் இணைந்து நடித்திருக்கும்  'மிஸ்டர் சந்திரமௌலி' படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தில் நாயகியாக வரும் ரெஜினா, கிளாமரில் கலக்கியிருக்கிறார். இன்னொரு நாயகியான வரலட்சுமி, ரெஜினாவுக்கு சவால் விடும்படியான கதாப்பாத்திரத்தை கையில் எடுத்திருக்கிறார். 

இவர்களோடு இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், சதிஷ், விஜி சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எஸ்.சுரேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். இந்தப் படத்தை திரு இயக்கியிருக்கிறார், தனஞ்செயன் தயாரித்திருக்கிறார். 

கிளாமர், காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என கமர்ஷியல் பேக்கேஜ் ஆக உருவாகியிருக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' திரைப்படம், நாளை தமிழகம் முழுவதும்  300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இதற்கு முன்பு கெளதம் கார்த்திக் நடித்த ’இந்திரஜித்’ படம் போணியாகவில்லை! விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படமும் அவருக்கு திருநாளாக அமையவில்லை!

இதற்கிடையே, அடல்ட் காமெடி ஜானரில் நடித்த ’ஹர ஹர மாஹா தேவகி’ மற்றும் ’இருட்டு அறியில் முரட்டுக் குத்து’ படங்கள் ஓரளவுக்கு ஓடினாலும், அந்தப் படங்கள் கெளதம் கார்த்தியின் இமேஜை ’டேமேஜ்’ செய்திருக்கிறது! இந்த சூழ்நிலையில், நாளை வெளிவரும் ’மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தைத்தான் மலைபோல நம்பியிருக்கிறார் கெளதம் கார்த்திக். இந்தப் படம் அவருக்கு கை கொடுக்குமா என்பது ரசிகர்கள் அளிக்கும் தீர்ப்பில் தான் இருக்கிறது!

Advertisement:
[X] Close