விஷாலுடன் நடிக்க மறுத்த ஆர்யா - பரபரப்பு தகவல்!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 05:10 pm

arya-rejected-the-opportunity-to-act-in-irumbuthirai

இருப்புத்திரை படத்தில் விஷாலுடன் நடக்க ஆர்யா மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும், இப்படத்தின் வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடித்திருந்தார்.

அர்ஜூன் நடித்திருந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஆர்யாவிடம் தான் பேச்சுவாரத்தை நடந்துள்ளது. ஆனால் ஆர்யா அந்த வாய்ப்பை மறுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக திகழ்பவர்கள் ஆர்யாவும், விஷாலும். நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் என விஷாலக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர் ஆர்யா. ஆனால் விஷால் படத்தில் நடிக்க ஆர்யா ஏன் மறுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்யாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன . இந்த நேரத்தல் தன்னுடைய மார்க்கெட்டை பழைய நிலைக்கு கொண்டுவர ஆர்யா போராடி வருகிறார். இந்த சூழலில், வில்லனாக நடித்தால், தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள்தான் வரும் என்று நினைத்து அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தற்போது சூரியாவுடன் ஆர்யா கைகோத்துள்ளார். விஷாலும் ஆர்யாவும் இணைந்து பாலாவின் 'அவன் இவன்' படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
[X] Close