ட்ரெண்டிங் ஆகும் ‘சண்டக்கோழி 2' ட்ரெய்லர்!

  பால பாரதி   | Last Modified : 12 May, 2018 12:16 pm


லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடித்திருக்கும் ‘சண்டக்கோழி 2' படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. 

2005-ஆம் ஆண்டு, நடிகர் விஷால், இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘சண்டக்கோழி'. தற்போது, இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால், லிங்குசாமி கை கோர்த்துள்ளனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இது விஷாலின் 25-வது படமாகும். 


முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி இன்னொரு நாயகியாக வருகிறார், இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’மூலம் தயாரிக்கிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.  இதன் ஆடியோ ரைட்ஸை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று இரவு வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.   

Advertisement:
[X] Close