பிரபல திருடர் கதையில் நிவின் பாலி - மோகன்லால்

  திஷா   | Last Modified : 11 Jul, 2018 01:46 am

kayamkulam-kochunni-trailer

வாழ்க்கை வரலாற்றுப் பட காய்ச்சலில் மலையாள திரையுலகமும் தப்பவில்லை. கேரளாவில் புகழ் பெற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது. நெடுஞ்சாலை திருடரான கொச்சுன்னி தான் திருடியதை ஏழை மக்களுக்குக் கொடுத்து வாழ வைப்பவர். 1800-களில் வாழ்ந்த இவர் 1859-ல் சிறையிலடைக்கப் பட்டு, அங்கேயே மரணமடைந்தார். தற்போது படமாக உருவாகி வரும் இந்தக் கதையில் ஹீரோவாக நிவின் பாலி நடிக்கிறார். ப்ரியா ஆனந்த், ப்ரியங்கா திம்மேஷ் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கொச்சுன்னியின் நண்பரான இதிக்கரா பக்கி கதாபாத்திரத்தில் மோகன் லால் நடித்துள்ளார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இந்தப் படத்தை ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 

தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் தற்போது இதன் ட்ரைலரும் வெளியாகியிருக்கிறது. 

Advertisement:
[X] Close