’சந்தோஷத்தில் கலவரம்' பட ட்ரெய்லர் ரிலீஸ்! 

  Bala   | Last Modified : 12 Jul, 2018 08:29 am

santhoshathil-kalavaram-trailer

'சந்தோஷத்தில் கலவரம்' படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

புதுமுகங்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத் , ராகுல், கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்‌ஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'சந்தோஷத்தில் கலவரம்' . இவர்களுடன் பிரபல வில்லன் நடிகர் ரவி மரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் திம்மா ரெட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கிராந்தி பிரசாத் இயக்கியிருக்கிறார். இவர், பல்வேறு விளம்பரப்படங்கள், குறும்படங்களை இயக்கியவர். ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதை சொல்லும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது! 

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், ’சந்தோஷத்தில் கலவரம்' படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 

Advertisement:
[X] Close