திருமணத்தில் அட்சதையை வீசுவது சரியா?

  கோமதி   | Last Modified : 05 Jul, 2018 12:56 pm

auspicious-atchathai

திருமணம் , சீமந்தம், பிறந்த நாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்கல நிகழ்ச்சி  என்றாலும் பெரியவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைப்பது அட்சதை மூலமாகத்தான். அந்த அட்சதையின் சிறப்பு பற்றி தெரிந்துகொள்வோம்.

எது அட்சதை?

முனை முறியாத அரிசி தான் அட்சதை, நன் மங்களங்களை நல்குவது மஞ்சள். அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் .பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைத்திடும் தூய பசு நெய். இந்த மூன்று மங்கலப் பொருட்களின்  கூட்டணி தான் அட்சதை.

நமது திருமண விழாக்களில், மணமக்களை வாழ்த்தும் பொழுது மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். என்றாலும் ஒருமித்து மகிழ்வுடன் வாழவேண்டும்  என்று வாழ்த்துகிறோம். இந்த வாழ்த்தின் தாத்பர்யமே அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் என்பது.

மணவிழாக்களில் கும்பலோடு கும்பலாக அட்சதை வீசலாமா?

திருமண நிகழ்வுகளில்  உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும். மொத்தமாக மாங்கல்ய தானம் செய்யும் பொழுது தூவி வாழ்த்துவது நன்மையான பலன்களை, அதிகம் வழங்குவது இல்லை என்கிறது நம்முடைய சாஸ்த்திரங்கள்.

மனங்கள் இணைய  மங்கலம் மலர மங்கல சுப நிகழ்ச்சிகளில் மஞ்சள் மணக்கும் அட்சதை தூவி வாழ்த்துவோம் வாழ்க வெல்க பல்லாண்டு என்று!

Advertisement:
[X] Close