தெய்வ கடாக்ஷம் கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

  கோமதி   | Last Modified : 02 Jul, 2018 01:13 pm

mantra-of-the-day-a-slogan-to-get-over-from-the-poverty-and-to-get-the-blessings-of-the-goddess

அஞ்ஞானம் என்னும் இருள் நீங்கி மனதில் தெளிவு ஏற்பட்டு விட்டாலே,பாதைகள் நமக்கு தெளிவாகி விடும்.மனதில் சாந்தியும், புத்தியில் தெளிவும் ஏற்பட்டு விட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம். இறைவன் குடிகொண்டுள்ள திருக் கோயில், தெளிந்த நதிக்கரை, திருமகள் உறையும் கோசாலை, வாழ்க்கையில் தன்னை உணர்ந்த மகான்களின் சமாதி போன்ற இடங்களில், தீபமேற்றி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால், ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாகும். 

"க்னிர் ஜ்யோதீ ரவி ஜ்யோதிஷ் சந்த்ரோ ஜ்யோதிஸ் ததைவச
உத்தம: ஸர்வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம்”

பொருள் 

நெருப்பு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று ஒளிகளில் சிறந்ததான இந்த தீபத்தின் ஒளியை, தங்களுக்கு  சமர்ப்பிக்கிறேன். கருணையுடன் இதை ஏற்றுக் கொண்டு அருள்புரிய வேண்டும்” என்று சொல்லி வணங்க வேண்டும்.

Advertisement:
[X] Close