கரும்புள்ளிகளை போக்க சிம்பிள் டிப்ஸ்!

  Sujatha   | Last Modified : 09 Jan, 2018 12:29 pm


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர். ஆனால் முகத்தின் அழகு எதில் தெரியும் தெரியுமா? மூக்கில் தெரியும்... என்னதான் முகம் எம்.ஜி.ஆர் கலரில் தகதக என்று மின்னினாலும், உங்கள் மூக்கில் கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் இருந்தால் அது உங்கள் மொத்த அழகையும் கெடுத்து விடும். அச்சச்சோ எனக்கு இருக்கே என்று கவலைப் படுபவரா நீங்கள் அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த பிரச்னையை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்...   

தேன்  


தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

Advertisement
standardcoldpressedoil.com

ஆவிப்பிடிப்பது 


சுடுநீரில் மூலிகைகளான லாவெண்டர், எலுமிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து, ஆவிப்பிடித்து சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், கரும்புள்ளிகளும் விரைவில் மறையும்.

மஞ்சள் 

மஞ்சளில் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் செய்து அதனை கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி, 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து  இதனை கழுவி விட வேண்டும். மஞ்சள் இயற்கையாகவே கரும்புள்ளிகளை நீக்க கூடிய வல்லமை கொண்டது.

சர்க்கரை 

கரும்புள்ளிகளை நீக்க சர்க்கரை கூட பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஈரமான முகத்தில் சர்க்கரைக் கொண்டு மென்மையாக தேய்த்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் போய்விடும்.

எலுமிச்சை 


எலுமிச்சையை சிறு துண்டுகளாக்கி மூக்கின் மேல் தேய்த்தால், சருமத்துளைகளானது திறந்து, கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.

Advertisement:
[X] Close