நீங்க சரியா சாப்பிடுறீங்களா?

  Shalini   | Last Modified : 07 Jul, 2018 09:19 am

5-signs-your-body-is-not-getting-the-right-diet

நன்றாக படிக்கணும், நல்ல வேலைக்குப் போகணும், நிறைய சம்பாதிக்கணும் என்ற லட்சியங்களைப் போல் உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதில் பொதுவாக பலரும் அக்கரைக் காட்டுவதில்லை. நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான அளவு ஊட்டச் சத்துக்கள் இல்லை என்பதை சில அறிகுறிகளின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். 

முடியின் அடர்த்தி குறைதல் 
உங்கள் உடலில் போதுமானளவு இரும்பு சத்து இல்லையென்றால் அதற்கான முதல் அறிகுறியே முடி உதிர்தல் தான். ரத்தத்திற்கு ஆக்ஸிஜனைக் கடத்தும் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க இரும்பு சத்து மிக முக்கியம். அதனால் இரும்பு சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகள், பழங்கள், பேரிச்சம்பழம் ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

கெட்ட சுவாசம் 
உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும் க்ளுக்கோஸ் பற்றாக்குறையாகும் போது, ஏற்கனவே நம் உடலில் சேமிக்கப் பட்டிருக்கும் 'ஃபேட் பாக்கெட்டுகளை' தானாகவே உடல் உடைத்துக் கொள்ளும். அந்த மாற்றத்தின் போது வெளிவரும் கீட்டோகள் துர்நாற்றத்தை உருவாக்கும். அதனால் நீங்கள் சுவாசிக்கும் போது கெட்ட வாடை வீசும். சாப்பிடாமல் இருக்கும் நேரங்களில் இதனை உணரலாம். 

மலச்சிக்கல் 
போதுமானளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். தண்ணீரும் நார்ச்சத்தும் உடற் கழிவை வெளியேற்ற மிகவும் முக்கியமானவை. அதனால் முழு தானியங்கள், நார்ச்சத்து மிகுந்த உணவுகள், நட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். 

உதட்டைச் சுற்றி புண் 
இதுவும் இரும்பு சத்து குறைப்பாட்டைக் குறிப்பதே. அதோடு பூஞ்சை மற்றும் பாக்டீரியல் இன்ஃபெக்‌ஷனாகவும் இருக்கலாம். அதனால் சரியான உணவு எடுத்துக் கொள்வதோடு லிப் பாம், வெண்ணெய் ஆகியவற்றை உதட்டில் தடவுங்கள். 

மோசமான ஸ்கின்
நீங்கள் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டும் கண்ணாடி தான் உங்களுடைய ஸ்கின். மோசமான உணவுமுறை உங்களுக்கு முகப்பருவை பரிசாகக் கொடுக்கும். கால்சியம் பற்றாக்குறையினால் வெண் திட்டுக்கள் வரும். 

அதனால் மேற்கூறிய பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால், சரியான உணவுமுறையை கடைபிடியுங்கள் பிரச்னைகள் பனி போல் விலகும்!

Advertisement:
[X] Close