சிரியாவில் தொடர் தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 11:41 am

air-strike-kills-10-civilians-in-northeast-syria

சிரியாவில் அரசுப்படையினர் கிளர்ச்சியாளர்களை குறிவைக்கும் பொருட்டு நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 10 பேர் வரையில் உயிரிழந்தனர். 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவப்படையினருக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில், குழந்தைகள்  உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்திருந்தாலும், சிரிய அரசு அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. 

இதையடுத்து நேற்று கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இடங்களை கைப்பற்றும் பொருட்டு, சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள  ஹசாகே(Hasakeh) மாகாணத்தில் சிரிய - அமெரிக்கப்படையினர் வான்வழித்தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் வரையில் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னதாக சிரியப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

..
Advertisement:
[X] Close