தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் பலி, 200 பேர் காயம்

  arun   | Last Modified : 11 Sep, 2016 10:36 am

வடமேற்கு தான்சானியாவில், விக்டோரியா ஏரி அமைந்து உள்ள பகுதியில் 5.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் புகோபாவில் வீடுகள் இடிந்து விழுந்து, 13 பேர் பலியாகினர் எனத் தெரியவந்துள்ளது. காயம் அடைந்த 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தினால் நாட்டின் தலைநகரில் எந்தஒரு பாதிப்பும் இல்லை. நிலநடுக்கமானது ருவாண்டா, உகாண்டா மற்றும் கென்யாவிலும் உணரப்பட்டது என அமெரிக்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

..
Advertisement:
[X] Close