பிரம்மாண்ட கடவுள் சிலை கூடாது: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது சீனா!

  Padmapriya   | Last Modified : 26 May, 2018 07:40 pm

பொது இடங்களில், மத சம்பந்தப்பட்ட கடவுள் சிலைகளை மிகப் பெரிய அளவில் அமைப்பதை கட்டுப்படுத்துமாறு சீன அரசு அதன் மாகாண தலைமைக்கு உத்தரவிட்டுள்ளது.  

சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்ற பின், சீனாவின் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். நாத்திக கோட்பாடுகள் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார். இதற்கான திட்டங்கள் அங்கு வகுக்கப்படுகின்றன. கம்யூனிச நாடாக இருந்தாலும் சீனாவில் இந்தியாவில் இருந்து சென்ற புத்த மதமும், மிகப் பழமையான தாவோயிசமும் அதிகாரப்பூர்வ சமயங்களாக இருக்கின்றன. இதுதவிர, இஸ்லாம், கத்தோலிக்கம், புரோட்டஸ்டான்ட் என இதர மத மக்களும் குறிப்பிட்ட அளவில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில், சீனாவில் பொதுவெளிகளில் மத சம்பந்தப்பட்ட சிலைகள் அமைப்பதற்கு சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து, சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த மின்சு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சியாங் குன்சின், மத சிலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் மூலம் அரசு மதத்துக்கு எதிரானது அல்ல, மத ரீதியான வணிகமயமாக்கலை கட்டுப்படுத்தவே இந்த வழிமுறை கையாளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மதங்கள் வணிகமயமாக்கப்படுவதால் அதன் புனிதம் கெடுவதோடு, சமூகத்தின் சமநிலை பாதிக்கப்படும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

சீனாவில் புத்த மதம் பரவலாக பின்பற்றப்படுகிறது. அதே போல், சீனாவை பூர்வீகமாக கொண்ட தாவோயிசம் மதம் திகழ்கிறது. இதனால், அங்கு புத்தரின் புத்தரின் சிலைகள் நாடு முழுவதும் மிகப்பெரிய எண்ணிக்கையில் காணப்படுகிறது. இன்னும் அதிக அளவில்  மிக உயரமான புத்த சிலைகள் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

..
Advertisement:
[X] Close