பப்புவா நியூ கினியா தீவில் மீண்டும் நிலநடுக்கம்

  முத்துமாரி   | Last Modified : 05 Mar, 2018 10:42 am


பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவாகியுள்ளது. 

கடந்த வாரம் பப்புவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 7.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement:
[X] Close