ரஷ்யா: தங்கம், வைரம் மழையாக பொழிந்த விமானம்

  Sujatha   | Last Modified : 17 Mar, 2018 07:39 am


ரஷ்யாவில் சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்க கட்டிகள் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று இந்திய மதிப்பில் சுமார் ரூ.2400 கோடி  மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியற்றை  ஏற்றி கொண்டு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட ஒரு சில நொடிகளில் விமானத்தின் கதவில் சேதாரம் ஏற்பட்டு,  தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது. இதனை தொடர்ந்து விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.  இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.  விமானம் பழுதானது தெரியாமல் சரக்குகளை ஏற்ற அனுமதித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தொழில்நுட்ப அதிகாரிகளை முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
[X] Close