முத்தமிட்டுக்கொண்ட காதல் ஜோடிகளுக்கு சவுக்கு அடி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Apr, 2018 10:54 pm


இந்தோனேஷியாவில் பொது இடத்தில் காதல் செய்த ஜோடிகளுக்கு பொது இடத்திலே வைத்து பிரம்பால் அடித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தோனேசியாவின் சுற்றுலா நகரங்களில் ஒன்றான அஹே மாகாணத்தில், நேற்று பொது இடத்தில் முத்தம் கொடுத்த காதல் செய்த ஜோடிகளுக்கு பிரம்பு அடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மிகக் கடுமையான இஸ்லாமிய சட்டமுறை நடைமுறையில் உள்ளது. இதன்படி திருமணம் ஆகாத ஜோடி பொது இடத்தில் ஒன்றாக இருப்பது, முத்தமிட்டுக்கொள்வது உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதன்படி, பொது இடத்தில் முத்தமிட்டுக்கொண்ட ஜோடிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொது மக்கள் முன்னிலையில் அழைத்து வரப்பட்ட ஜோடிகளுக்கு தலா 12 சவுக்கு அடிகள் வழங்கப்பட்டன.


இதேபோல், பாலியலுக்கு அழைத்ததாக கூறி இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் பொது இடத்தில் வைத்து தலா, 10 சவுக்கு அடி வழங்கப்பட்டது. இதை ஏராளமானோர் கூடி நின்று பார்த்ததுடன் போட்டோ, வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.

இந்தோனேஷியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தி, அதன் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவதற்கு அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காதலர்கள் சந்தித்துக்கொண்டது, முத்தமிட்டுக்கொண்டது எல்லாம் ஒரு குற்றம் என்று கூறி அடிப்பது கண்டனத்துக்கு உரியது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
[X] Close