இந்தோனேசியாவில் 3 தேவாலயங்களில் தாக்குதல்: 11 பேர் பலி, பலர் படுகாயம்

Last Modified : 13 May, 2018 04:32 pm

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து மூன்று தேவாலயங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியானதாகவும் 45 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ளது சுராபாயா நகரம். இந்தோனேசியாவில் 2வது பெரிய நகரம் இது.  இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேசியாவின் இந்த நகரத்தில் மட்டும் பல தேவாலயங்கள்  உள்ளன. இன்று காலை இங்குள்ள 3 தேவாலயங்களில் அடுத்தடுத்து தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

3 தீவிரவாதிகள் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரியவந்துள்ளது. இதில் பொதுமக்களில் 11 பேர் பலியானதாகவும் 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.  ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அராப் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த மோசமான தாக்குதல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

Advertisement:
[X] Close