கிம் ஆட்சியில் வட கொரியா செல்லும் முதல் வெளிநாட்டு அதிபர்

  Padmapriya   | Last Modified : 04 Jun, 2018 07:11 pm

syria-s-bashar-al-assad-to-visit-north-korea

சிரிய அதிபர் அல் ஆசாத், வடகொரியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிம் பதவியேற்ற பின் முதன் முதலாக வட கொரியா செல்லும் வெளிநாட்டு அதிபராக ஆசாத் இருப்பார். 

சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத், வடகொரியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக வடகொரிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், வரும் ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபரான ட்ரம்ப்பை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதால், சிரியா அதிபருடனான சந்திப்பு எப்போது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

சிரியா அதிபர் வடகொரியா செல்வது உறுதியானால், கிம் ஜாங் உன் அதிபராகப் பதவியேற்ற பின் முதன் முதலாக வடகொரியா செல்லும் வெளிநாட்டு அதிபர், அல் ஆசாதாக தான் இருப்பார்.

அதே போல, சிரிய அதிபர் ஆசாதும் பெரும்பாலும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளாதவர். வடகொரியா மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் அணுஆயுதச் சோதனை நடத்திவருவதாக உலக அளவில் புகார்கள் கூறப்பட்டன. அந்தப் புகார்களை இந்த இரு நாடுகளும் மறுத்துவந்தநிலையில், தற்போது இந்த இரு நாட்டு அதிபர்களின் சந்திப்புக்கான திட்டம், உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisement:
[X] Close