காபூல் குண்டுவெடிப்பில் 40 பேர் பலி

  Anish Anto   | Last Modified : 28 Dec, 2017 01:57 pm


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்று முன்னர் நடந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

காபூலில் உள்ள கலாச்சார மையம் மற்றும் ஆப்கான் வாய்ஸ் செய்தி நிறுவனத்தின் அருகில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது. செய்தி நிறுவனத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானில் சோவியத் படைகள் ஊடுருவிய தினத்தின் 38-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அப்போது இந்த வெடிகுண்டு தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 40 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தற்போது வரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்றும், பலர் பலியாகி இருப்பதாகவும் ஆப்கான் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஆப்கான் வாய்ஸ் செய்தி நிறுவனமும் கடுமையான சேதத்தை சந்தித்தது. 30-க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது. 

Advertisement:
[X] Close