இந்த வருடத்திலாவது தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்!

  Shanthini   | Last Modified : 08 Jan, 2018 09:43 pm


கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத தமிழ் மக்களின் கோரிக்கைகள் இந்த ஆண்டிலாவது நிறைவேற்றப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. சிக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திடம், தமிழ் மக்களால் தொடர்ந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றவை முக்கியமானது. இந்த கோரிக்கைகள் எவையும் இது வரையில் நிறைவேற்றப்படவில்லை. அதனால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருட நிறைவு விழாவை கொண்டாடும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்விப் பொதுத்தராதர உயர் தரப் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், கடந்த ஆண்டுகளில் தாமதப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகள் இந்த ஆண்டிலாவது நடைமுறைப்படுத்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement:
[X] Close