"ரோட்டில் பொங்கல் கொண்டாடும் நிலை": இலங்கை மக்கள் வருத்தம்

  Shanthini   | Last Modified : 14 Jan, 2018 04:51 pm


இலங்கை அரசாங்கம் தங்களை சாலையில் பொங்கல் கொண்டாட வைத்துள்ளது, என கேப்பாப்புலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான நிலங்களை இலங்கை ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி 319வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களில் இருந்து 133.4 ஏக்கர் கடந்த 28ம் தேதி விடுவிக்கப்பட்டது. ஆனாலும் 104 குடும்பங்களது 181 ஏக்கர் நிலங்கள் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் மைத்திரிபால அரசாங்கம், தம்மை சாலையில் தைப்பொங்கல் கொண்டாட வைத்துள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவோ ராணுவத்திற்கு எதிராகவோ போராடவில்லை. மாறாக தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Advertisement:
[X] Close