BMW காரில் தந்தையை அடக்கம் செய்த மகன்

  Newstm News Desk   | Last Modified : 13 Jun, 2018 09:45 am

nigerian-man-buries-father-in-bmw-car

நைஜீரிய நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தையை BMW காரில் அடக்கம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நைஜீரிய நாட்டின் அனம்பரா மாகாணத்தில் உள்ள போசி பகுதியைச் சேர்ந்தவர் அசுக்பியுக், இவர் அந்தப்பகுதியில் மிகப்பெரும் செல்வந்தர்களுள் ஒருவராவார்.அண்மையில் அவரின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக புதிய BMW கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தியுள்ளார். இது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 

அந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.45 லட்சமாகும்.  தான் மரணமடைந்துவிட்டால் தனது உடலை புதிய BMW காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பது தனது ஆசை என அவர் முன்னரே கூறியிருந்ததாகவும், தனது தந்தையின் ஆசையை தான்  நிறைவேற்றவே இவ்வாறு செய்ததாகவும் அசுக்பியுக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அவரின் தந்தை பாசம் ஒரு பக்கம் பாராட்டப்பட்டாலும் அந்த பணத்தை ஏழைகளுக்காக செலவிட்டு இருக்கலாம் என்றும் இது  வெறும் பகட்டுக்காக செய்யப்பட்டது என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

..
Advertisement:
[X] Close