• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

22-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பாஜக அரசு நேற்று குடியரசு தலைவர் வேட்பாளரை அறிவித்தது. இந்நிலையில் பாஜகவுக்கு போட்டியாக புதிய வேட்பாளரை தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக நாளை மறுநாள்(22-6-2017) சிறப்பு கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகள் தரப்பு குடியரசு தலைவர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இது குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "ராம்நாத் கோவிந்த்(பாஜக வேட்பாளர்) இந்த பதவிக்கு தகுதியானவர் இல்லை என நான் கூறவில்லை. வேறு சில எதிர்க்கட்சி தலைவர்களுடன் இது குறித்து பேசினேன். அவர்களும் பாஜகவின் முடிவு குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இந்த நாட்டில் சிறந்த தலித் தலைவர்கள் பலர் உள்ளனர். பிரணாப் முகர்ஜி அளவிற்கு திறமை வாய்ந்த ஒருவர் அல்லது சுஷ்மா ஸ்வராஜ், அத்வானி போன்றவர்களை கூட குடியரசு தலைவர் வேட்பாளராக நியமித்து இருக்கலாம்," என்றார். வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பாஜக ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement:
[X] Close