நீதிபதி லோயா வழக்கு மிக முக்கியமான ஒன்று: உச்ச நீதிமன்றம்

  SRK   | Last Modified : 22 Jan, 2018 09:28 pm


சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து, 4 மூத்த நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். 

சமரசம் வந்தபின், தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இன்று அந்த வழக்கை விசாரித்தது. அப்போது இந்த வழக்கு மிகவும் முக்கியமானது என கூறி, அனைத்து ஆதாரங்களையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. சர்ச்சைக்குரிய சொராபுதீன் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மரணமடைந்தார். அவரது மரணம் இயற்கையானது என போலீசார் தெரிவித்து விட்டாலும், அவருக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது உட்பட பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. 

"இந்த விஷயம் மிகவும் முக்கியமானது. முழு ஆதாரங்களையும் நாங்கள் பார்க்க வேண்டும். இந்த வழக்கை சரியாக விசாரிக்காவில்லை என வருங்காலத்தில் நமக்கு எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது" என்று நீதிமன்றம் கூறியது. அனைத்து ஆதாரங்களையும், ஆவணங்களையும் தங்கள் முன் சமர்ப்பிக்குமாறு கூறி, பிப்ரவரி 2ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தது. 

Advertisement:
[X] Close