மாட்டுத்தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு குற்றவாளி

  முத்துமாரி   | Last Modified : 19 Mar, 2018 02:06 pm


மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 

பீகார் மாநில மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 3 வழக்குகளில் லாலு, குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 4வது வழக்கான தும்கா கருவூலத்தில் 3.13 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணை ராஞ்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 5ம் தேதி இதன் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

இதில் லாலு பிரசாத், ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 29 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். தீர்ப்பில் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெகன்நாத் மிஸ்ரா இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. லாலு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் ஓரிரு நாட்களில் வழங்கப்படவுள்ளது. 

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லாலு, தீர்ப்பு வெளியாவதைத் தொடர்ந்து. சற்றுமுன் ராஞ்சி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Advertisement:
[X] Close