காவிரி வரைவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம்: கர்நாடகா

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 11:31 am


ஒரு சில அம்சங்களைத் தவிர, காவிரி வரைவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம் என கர்நாடக தரப்பு அரசு வழக்கறிஞர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், 3 முறை கால அவகாசத்திற்கு பிறகு மத்திய அரசு வரைவுத் திட்டத்தினை கடந்த மே 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. காவிரி வாரியத்திற்கு இணையான ஒரு அமைப்பு, தலைவர் உள்பட 9 பேர் கொண்ட அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசுக்கு சாதகமாகவும் சில அம்சங்கள் உள்ளன. இதையடுத்து மே 14ல் நடந்த விசாரணையில், வரைவுத் திட்டம் குறித்து பரிசீலித்து மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு மே 16ம் தேதி (இன்று) வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதையடுத்து, இன்று தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க இருக்கின்றன. இதுகுறித்து கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர், ஒரு சில அம்சங்களைத் தவிர காவிரி வரைவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், 'காவிரி நீர் பயன்பாட்டிற்கு குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஒதுக்கப்பட்ட தண்ணீரை நாங்கள் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் வலியுறுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement:
[X] Close