லாலுவுக்கு ஜூலை 3ம் தேதி வரை ஜாமின் நீட்டிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 23 Jun, 2018 12:49 am

ranchi-high-court-extends-lalu-prasad-s-provisional-bail-till-july-3

மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிக்கி, சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜாமின் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த சமயத்தில் கால்நடை தீவனம் வாங்கியதாக அரசின் கருவூலத்தில் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நான்கு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. 

அதன்படி முதல் நான்கு வழக்குகளிலும் சேர்த்து 27.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். ஜார்கண்ட் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையடுத்து மே 12ம் தேதி தனது மகன் தேஜ் பிரதாப் யாதவ்- வின்  திருமணத்தில் கலந்துகொள்ள அவருக்கு  ஜார்கண்ட் நீதிமன்றம்  5 நாட்கள் பரோல் வழங்கியது. தொடர்ந்து அடுத்த விசாரணையில் மருத்துவ சிகிச்சை பெறும்பொருட்டு அவருக்கு ஜூன் 27 வரை ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது அவரது   ஜாமின் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து  ராஞ்சி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement:
[X] Close