கடவுளுக்காக மகளை பலியிட்டேன்- கொடூர தந்தையின் பகீர் வாக்குமூலம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Jun, 2018 04:42 pm

rajasthan-jodhpur-man-killed-4-year-old-daughter

ராஜஸ்தான் மாநிலத்தில் கடவுளை மகிழ்விப்பதற்காக எனக் கூறி தனது 4 வயது மகளை கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்தவர் நவாப் அலி குரேஷி. இவர் ஜோத்பூர் நகரில் மனைவி மற்றும் தனது மகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டின் மாடியில் நாவப் அலி, அவரது மனைவி, மகள் ஆகியோர் உறங்கி கொண்டிருந்தனர். காலையில் எழுந்து பார்க்கும் போது மகளை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியதில் 4 வயது மகள்  வீட்டிற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணை நடைபெறும் வரை ஏதும் தெரியாதவராக இருந்த குரேஷி, சற்று அழுத்தமாக கேட்டதும் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும், கடவுளிடம் சொல்லி என்னை காப்பாற்றுங்கள் என்றும் கூறியுள்ளார்.  முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் குரேஷியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், தன் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கடவுள்தான் எனக்கு பிடித்தமான ஒன்றை பலியிட வேண்டும், அப்போதுதான் நன்மை செய்வேன் என்று கூறினாராம்... அதனால், கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவே தன் மகளின் கழுத்தை அறுத்து கொன்று பலியிட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து குரேஷியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.

..
Advertisement:
[X] Close