• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

கல்லூரி விடுமுறையில் காதலர் தினத்துக்காக வந்தால் நடவடிக்கை: லக்னோ பல்கலை.

  Sujatha   | Last Modified : 14 Feb, 2018 12:19 pm


சிவராத்திரியை முன்னிட்டு மாணவர்களுக்கு லக்னோ பல்கலைக்கழகம் புதன்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது.

இதனை மீறி காதலர் தினத்தை கொண்டாட காலேஜ் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லக்னோ பல்கலைகழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் அதிகாரி வினோத் சிங் கூறுகையில், "கடந்த காலங்களில் சில மாணவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு காதலர் தினத்தை கொண்டாடினார்கள். 

மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள், செயல்முறை பயிற்சி, கலாசார நிகழ்ச்சிகள் என எதுவும் பல்கலைக்கழகத்தில் நடைபெறாது.

எனவே இன்று எந்த ஒரு மாணவரும் பல்கலைக்கழகத்துக்கு வரக்கூடாது. மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சுற்றித்திரிந்தாலோ, அமர்ந்திருப்பதை கண்டாலோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Advertisement:
[X] Close