ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சி.பி.ஐ முன்பு ப.சிதம்பரம் ஆஜர்

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2018 01:14 pm

former-financial-minister-p-chidambaram-appeared-before-cbi

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ முன்பு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் இந்தியாவில் ரூ.305கோடிக்கு முதலீடு செய்ய அனுமதியளித்ததில் அப்போதைய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி 10 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கடந்த வருடம் மே 15ம் தேதி சி.பி.ஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று அவர் சி.பி.ஐ முன்பு ஆஜரானார். இந்நிலையில் ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் வரும் 12ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த இரண்டு வழக்குகளிலும் அவரை கைது செய்ய நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

..
Advertisement:
[X] Close