காவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ- வைரலாகும் வீடியோ

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jun, 2018 04:18 pm

madhya-pradesh-bjp-mla-slaps-constable-viral-video

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் காவலரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் உதயநகர் மாவட்ட எம்.எல்.ஏவான சம்ப்லால் தேவா, தாவ்ஸ் நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குள் சென்றுள்ளார். அவரை உள்ளே விடாமல் காவலர் சந்தோஷ் இவானாதி தடுத்துள்ளார். இதையடுத்து கோபமடைந்த எம்.எல்.ஏ அந்த காவலரை 2 முறை அறைந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பணியில் இருந்த காவலரை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்ய எம்.எல்.ஏ மீது இந்திய தண்டனைச் சட்டம் 353- 332 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கூறிய காவலர் அஞ்சுமன் சிங்,  “ஆதரவாளர்களுடன் திரண்டு வந்ததாலே சோதனைகளுக்காக எம்.எல்.ஏ.வை இவானாதி நிறுத்தியுள்ளார். இதற்காக எம்.எல்.ஏ. காவலரை தாக்கியுள்ளார். இதை தொடர்ந்து  எம்.எல்.ஏ மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது”  என கூறினார்  

விசாரணை நடத்தியதில் காவலர் இவானாதிக்கும் எம்.எல்.ஏவின் மகனுக்கும் நீண்டகாலமாக பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், முன்பகை காரணமாக எம்.எல்,ஏ அடித்திருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எம்.எல்.ஏ அடிக்கும் வீடியோ வெளியாகி இருப்பது பா.ஜ.க-வினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

..
Advertisement:
[X] Close