• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

ராஜஸ்தானில் ‘ஒரு நாள் கலெக்ட்டரான மாணவி’

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Jun, 2018 08:18 pm

rajasthan-topper-treat-as-a-collector-for-one-day

ராஜஸ்தானில் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக கவுரவிக்கப்பட்டார்.

ராஜஸ்தான் மாநில, ஜூன்ஜூனு மாவட்டத்தை சேர்ந்த வந்தனா குமாரி என்ற மாணவி நடந்துமுடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். வந்தனா குமாரி, மாவட்ட ஆட்சியராவதே எனது லட்சியம் என கூறியதையடுத்து மாவட்ட நிர்வாகம் அவரை ஒரு நாள் ஆட்சியராக அமரவைத்து அழகு பார்த்தது. 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் யாதவ் கூறுகையில், “வருங்காலத்தில் வந்தனா குமாரி ஆட்சியராக வரவேண்டும். அவரை ஊக்குவிக்கும் விதமாக தான அவரை ஒரு நாள் கலெக்ட்டராக பணியமர்த்தி மகிழ்ச்சியடைய செய்தோம்” என கூறினார்.  

இதுகுறித்து மாணவி வந்தனா குமாரி கூறுகையில், “கலெக்ட்டராக என்னை நான் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. கடுமையாக படித்து நிச்சயமாக ஒரு நாள் ஐ.ஏ. அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்வேன். மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது என கனவு, அதை நனவாக்க கடுமையாக உழைப்பேன். குறிப்பாக சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு சேவை செய்யவே விருப்ப படுகிறேன்.  ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருமே நிஜ ஹீரோக்கள்” என கூறினார். 


 

Advertisement:
[X] Close