• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார் பிரதமர்

  Newstm News Desk   | Last Modified : 13 Jun, 2018 09:29 am

modi-s-hum-fit-toh-india-fit-video

பிரதமர் மோடி தான் தினமும் காலையில் செய்யும் உடற்பயிற்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் துவங்கிய பிட்னஸ் சேலன்ஞ் நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் பல பிரபலங்களும் இந்த சவாலை ஏற்று தங்களது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் அவர்கள் பிறருக்கும் பிட்னஸ் சவால் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது உடற்பயிற்சி வீடியோவை பதிவிட்டார். மேலும் அந்த பதிவில் பிரதமர் மோடியை இணைத்து இது போன்ற வீடியோவை வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்தார். அதற்கு அப்போது பதிலளித்த பிரதமர் மோடி, விரைவில் வீடியோவை பதிவிடுவேன் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் தற்போது அவர் தினமும் காலையில் செய்யும் உடற்பயிற்சியின் வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் அடிப்படையில் உடற்பயிற்சியை அவர் செய்கிறார். மேலும் தான் மூச்சு பயிற்சியை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வீடியோவுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பிட்னஸ் சவால் விடுத்துள்ளார். மேலும் அந்த பதிவில் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கம் வென்ற பத்ராவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள மோடி, இந்திய மக்கள் உடற்பயிற்சிக்காக சிறிது நேரம் செலவிட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். 

வீடியோவை பார்க்க: இங்கே கிளிக் செய்யவும்

Advertisement:
[X] Close