• முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

மும்பை: தீபிகா படுகோன் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 05:50 pm

fire-breaks-out-in-residential-highrise-in-mumbai-s-worli

மும்பையில் 32 தளங்களைக்கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். 

மும்பை ஒர்லி பகுதியில் உள்ள பிரபாதேவி நகரில் இருக்கும் பியு மாண்டே என்ற அடுக்கு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக 25வது தளத்தில் தீ பிடித்து பரவ ஆரம்பித்தது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தது. கட்டிடத்தின் மேற்பகுதியில் தீ பரவுவதால் தீயை அணைக்க வீரர்கள் சிரமப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக மேற்தளங்களில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 33வது தளத்தில் தான் நடிகை தீபிகா படுகோன் தங்கி வருகிறார். இந்த விபத்து குறித்து தீபிகாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அனைவர்க்கும் நன்றி. தீயணைப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் பாதுகாப்பாக திரும்ப இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார். 

Advertisement:
[X] Close