• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

பா.ஜ.கவிற்கு பிரச்சாரம் செய்வேன்: அரவிந்த் கெஜ்ரிவால்

  Newstm News Desk   | Last Modified : 12 Jun, 2018 09:19 am

will-campaign-for-bjp-arvind-kejriwal

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் பா.ஜ.கவிற்காக பிரச்சாரம் செய்வேன் என்று அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் அந்த  தேர்தலில் ஆம் ஆத்மியிடம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

தற்போது டெல்லியின் முக்கிய துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனையடுத்து இது குறித்து டெல்லி சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய கெஜ்ரிவால், "2019 தேர்தலுக்கு முன்னதாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லி மக்கள் அனைவரும் பா.ஜ.கவிற்கு வாக்களிப்பார்கள். நாங்கள் உங்களுக்காக பிரச்சாரம் செய்வோம்" என்றார். 

Advertisement:
[X] Close