• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

பெங்களூரு ஜெயநகரில் காங்கிரஸ் வெற்றி

  Newstm News Desk   | Last Modified : 13 Jun, 2018 12:02 pm

congress-party-s-soumya-reddy-wins-jayanagar-constituency

பெங்களூரு ஜெயநகரில் நடந்த இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி வெற்றி பெற்றார். 

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் 12ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டசபையில் 222 இடங்களுக்கு வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பா.ஜ.க 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. 

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட விஜயகுமார் தேர்தலுக்கு முன்பே மே மாதம் 4ந்தேதி உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு வாக்கு பதிவு நடைபெறவில்லை. 

இதனையடுத்து நேற்று முன்னரே அறிவித்தப்படி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் காங்கிரஸ் பா.ஜ.கவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவது. பின்னர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செளமியா ரெட்டி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இறுதிச்சுற்று வாக்குபதிவுக்கு பின்பு முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகளான சௌமியா ரெட்டி 54045 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அடுத்த இடத்தை பிடித்த பா.ஜ.கவின் பி.என்.பிரலாத் 50270 வாக்குகள் பெற்றார். 

Advertisement:
[X] Close