ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 03:25 pm

aircel-maxis-case-ed-files-charge-sheet-against-karti-chidambaram

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அந்த சமயத்தில் மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3500 கோடி அளவில்முதலீடு செய்ய சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.  இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமின் பெற்றார். 

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கும் சிபிஐ நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 10ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது.

இதையடுத்து, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை இன்று டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

..
Advertisement:
[X] Close