இங்கிலாந்து அதிரடி; இந்தியாவுக்கு 199 இலக்கு!

  Newstm News Desk   | Last Modified : 08 Jul, 2018 08:35 pm

england-score-199-as-target-for-india

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில், இந்தியாவுக்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. 

டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ராய் மற்றும் பட்லர் அதிரடியாக விளையாடி வெறும் 7.5 ஓவர்களில்  முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் குவித்தனர். பின்னர் வந்த ஹேல்ஸ் 30 ரன்களும், பேர்ஸ்டோ 25 ரன்களும் அடித்து அதிரடியை தொடர்ந்தனர். அப்போது இந்திய வீரர் ஹர்டிக் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். 

20 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. 

Advertisement:
[X] Close