தங்கம் வென்ற ஹிமா தாஸுக்கு ஆங்கிலம் தெரியவில்லை - ட்விட்டர் சர்ச்சை

  திஷா   | Last Modified : 14 Jul, 2018 03:57 pm

hima-das-not-so-fluent-in-english-afi

உலக யு-20 தடகள சாம்பியஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஹிமா தாஸ், உலக அளவிலான தடகள போட்டியின் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதனால் இந்தியாவே அவரின் வெற்றியைக் கொண்டாடியது. 

ஆனால் இந்திய தடகள கூட்டமைப்பு, ஹிமாவின் வெற்றியைக் கொண்டாடாமல் அவரை விமர்சித்தது. ஆனால் விளையாட்டு ரீதியாக இல்லை. தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ், செய்தியாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாமல் தடுமாறியதை குறிப்பிட்டு இந்திய தடகள கூட்டமைப்பு ட்வீட் செய்து சர்ச்சையைக் கிளப்பியது. 

நாட்டிற்கே பெருமை சேர்த்து விட்டார், அவரின் ஆங்கில அறிவை பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்று ஐ.ஏ.எஃபை ரசிகர்கள் கிண்டலடித்தனர். பிறகு தங்களின் அந்த ட்வீட்டுக்கு மன்னிப்புக் கோரிய இந்திய தடகள கூட்டமைப்பினர், 'எங்களின் நோக்கம் ஹிமாவை விமர்சிப்பதல்ல, சின்ன கிராமத்திலிருந்து வந்த ஹிமா, எதையும் பொருட்படுத்தாமல் மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றிருக்கிறார். எங்கள் மீது கோபமாக இருக்கிறவர்களிடம் மீண்டும் மன்னிப்பு' என அடுத்த ட்வீட்டை தட்டியிருக்கிறார்கள்.    

Advertisement:
[X] Close