மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் நடால், 34 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 02:14 pm


மாட்ரிட் ஓபன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால்.

ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், ரஃபேல் நடால் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டியாகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் நடால், ஆஸ்திரியாவின் டோமினிக் தியமை எதிர்கொள்கிறார்.

களிமண் தரை போட்டியில் நடால் பெரும் 50-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம், முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோவை நடால் முறியடித்தார். 1984ல் ஜான் மெக்கன்ரோ, களிமண் தரையில் 49 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். அவரது அந்த சாதனையை நடால், 34 ஆண்டுக்கு பிறகு முறியடித்திருக்கிறார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், நம்பர் ஒன் சிமோனா ஹாலேப்பை 6-4, 6-3 என்ற கணக்கில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவா வென்றார். மற்றொரு ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் தோல்வி அடைந்து வெளியேறினார்.

Advertisement:
[X] Close