திரிபாதி அதிரடி; பெங்களூருக்கு 165 ரன் இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 05:54 pm


ஐ.பி.எல்-ன் 53-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இரு அணிகளும் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை பெறும் முனைப்புடன் களம் கண்டனர்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி, 58 பந்துகளில் 80 ரன் அடித்து அட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார். ரஹானே 33 ரன், க்ளாஸென் 32 ரன் அடித்தனர். உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான், 5 விக்கெட் இழந்து 164 ரன் எடுத்துள்ளது.

Advertisement:
[X] Close