எனது கேப்டன் இவர் தான்: கோலி ஓபன் டாக்

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 08:15 am

வீட்டில் எப்போதும் தனது மனைவி அனுஷ்கா தான் கேப்டன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் கேப்டனுக்கும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடந்தது.  சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோலியிடம், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் நீங்கள் வீட்டில் எப்படி என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

அதில், என் வாழ்க்கையில் அனுஷ்காவின் பங்கு மிகப்பெரியது. என்னுடைய வெற்றி, தோல்வி இரண்டிலும் அவர் என்னுடன் இருந்துள்ளார். பல வேலைகள் இருந்தாலும் மைதானத்திற்கு நேரடியாக வந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது என அனுஷ்கா எனக்காக ஏராளமானவற்றை செய்துள்ளார்.

என்னுடைய தீவிர ரசிகை போல் ஒவ்வொரு புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். முக்கியமான முடிவுகளை எடுக்க எனக்குப் பெரிதும் உதவுவார். என்னைவிட அவர் தான் சரியான முடிவை எடுப்பார். வீட்டில் அவர் தான் என்னுடைய கேப்டன். ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல மனைவி கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும். அனுஷ்கா தான் என்னுடைய பலமே, என கோலி கூறியுள்ளார்.

Advertisement:
[X] Close