கடைசி 3 ஓவரில் கொல்கத்தாவை கந்தலாக்கிய ஹைதராபாத்; 175 இலக்கு

Last Modified : 25 May, 2018 09:07 pm


ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முந்தைய குவாலிஃபையர் 2ம் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்துள்ளது. 

முதலில் பேட் செய்த ஹைதராபாத்திற்கு வ்ரிதிமான் சஹா(35) மற்றும் தவான்(34) இணைந்து அசத்தலாக விளையாடி நல்ல துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது ஹைதராபாத். ஆனால், அடுத்து வந்த வீரர்கள் சரியாக விளையாடாததால், ஹைதராபாத் நடுவில் திணறியது. வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் 28 ரன்கள் அடிக்க, 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே அடித்தது ஹைதராபாத். 

அந்த நேரம் களத்தில் இறங்கிய ரஷீத் கான், கொல்கத்தா பந்துவீச்சாளர்களை கந்தலாக்கினார். 19 மற்றும் 20வது ஓவர்களில் அவர், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரி அடிக்க, ஹைதராபாத் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை தொட்டது. 

இறுதி போட்டிக்கு முன்னேற 175 ரன்களை கொல்கத்தா அடிக்க வேண்டும். ஐபிஎல் தொடரிலேயே சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள ஹைதராபாத், இதுவரை மிகக்குறைந்த இலக்குகளையே பாதுகாத்து வென்றுள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Advertisement:
[X] Close