இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: பாபர் ஆசாம் வெளியேறினார்

  Newstm Desk   | Last Modified : 26 May, 2018 11:56 am


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் விலகினார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.  முதல் டெஸ்ட் போட்டி கடந்த 24ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 184 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இதனை தொடர்ந்து ஆடிய  பாகிஸ்தான் அணி,  இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழந்து 380 ரன் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் ஆசாம், 120 பந்துகள் சந்தித்து 68 ரன் எடுத்தார். போட்டியில், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை ஆசாம் எதிர்கொண்ட போது, அவரது இடதுகையில் காயம் ஏற்பட்டது.

இதனால் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில், கையில் எழும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆசாம், முழுமையாக வெளியேறியுள்ளார். அவர் தொடரில் பங்கேற்காதது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
[X] Close