ராஜீவ்காந்தி கொலைவழக்கு இன்று விசாரணை!

Last Modified : 17 Aug, 2017 12:15 pm

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 25 ஆண்டகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர்களை விடுவிப்பது தொடர்பில் இந்த விசாரணையை அடுத்து தெரியவரும் எனக்கூறப்படுகின்றது. இதுவரையில் இந்தக் கொலை சம்பந்தமான வழக்கில் மத்திய, மாநில அராசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்த முடிவை உடனே எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதைத்தொடர்ந்து இன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

..
Advertisement:
[X] Close