ஜெ. பங்களா விவகாரம்: கருத்து கூற பொது அறிவு இருந்தாலே போதும்... தி.மு.க பதிலடி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்று காலை லண்டனில் இருந்து சென்னை திரும்பி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை நினைவிடமாக்குவது சட்டப்படி தவறு என்று கூறியிருந்தார். இதற்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தார். மேலும் அது குறித்து அவர் கூறுகையில், "நினைவிடம் பற்றி கருத்துச்சொல்ல மு.க.ஸ்டாலின் என்ன வக்கீலா?" என்றும் கேட்டார். இதற்கு தி.மு.க பதிலடி கொடுத்துள்ளது. தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இது குறித்து கூறுகையில், "ஜெயலலிதாவின் வீட்டை எல்லாம் சட்டப்படி நினைவிடமாக்க முடியாது. இந்த விவகாரத்தில் கருத்துக் கூற வழக்கறிஞராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொது அறிவு இருந்தாலே போதும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராகத் தேவைப்பட்டால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும். ஆனால், இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும்" என்றார்.

Advertisement:
[X] Close