• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

என்னுடைய பிஆர்ஓ அமைச்சர் ஜெயக்குமார்- கமல்ஹாசன் 

  சுஜாதா   | Last Modified : 07 Jun, 2018 10:58 am

my-pro-minister-jayakumar-kamal-hassan

அமைச்சர் ஜெயக்குமார் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அதைவிடவும் முக்கியமான பிரச்னைகள் நிறைய இருக்கிறது. அவர் என்னுடைய  பிஆர்ஓ-வாக இருந்து, என்னுடைய புகழை நன்றாக பரப்பட்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2 நாட்களுக்கு முன்  காவிரி நீர் தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்  சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நேற்று கமலஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் பத்திரிகை  நிருபர் ஒருவர் ‘காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் அரசியல் ஞானம் இல்லாமல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், நீங்கள் தனி ஒருவனா? கூட்டத்தில் ஒருவனா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?’ என்று கேள்வி எழுப்பினார்  
அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், ‘ஆயிரத்தில் ஒருவன் அல்ல. நான் கோடியில் ஒருவன். 7½ கோடியில் ஒருவன். அவருக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அதைவிடவும் முக்கியமான பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. ட்விட்டரில்  பதில் சொல்லி அலுத்துவிட்டேன். இப்போது என்னுடைய வேலையை செய்கிறேன். அதையாவது செய்யவிடுங்கள். அவர் என்னுடைய மக்கள் தொடர்பு அதிகாரியாக (பி.ஆர்.ஓ.) இருந்துகொண்டு, என்னுடைய புகழை நன்றாக பரப்பட்டும்’ என்றார் 

Advertisement:
[X] Close