• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

ஆளும்கட்சியின் கலக்ஷன் ஏஜென்ட் தமிழக போலீசார்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Jun, 2018 01:34 am

evks-elangovan-press-meet

தமிழக போலீசார் ஆளும்கட்சியின் கலக்ஷன் ஏஜென்டாக செயல்படுகிறனர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  “பல்கலைக் கழக பேராசியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தது குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் இதுவரை என்ன கண்டுபிடித்தது என தெரியவில்லை. காங்கிரஸ்  ஆட்சி காலத்தில் என்.டி.திவாரி ஆளுநராக இருந்த போது, இதுபோன்ற பிரச்னை எழுந்தது. அப்போது சோனியா காந்தி, அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். நிர்மலா தேவிக்கும் கவர்னருக்கும் தொடர்பு இருந்தால் அவரை  பதவியை விட்டு  நீக்க வேண்டும். 

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்தக் கூடாது. தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேலை கொடுக்காததால் சோர்வாக இருக்கிறார்கள். பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்து கொண்டது வெட்கக்கேடானது. தமிழக அரசின் செயல்பாடு ஜீரோ. ஓ.பி.எஸ்,  ஈ.பி.எஸ் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மாநில விஷயங்களில் மத்திய அரசு  தலையிடுவது நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்.  தமிழக போலீசார் ஆளும்கட்சியின் கலக்சன் ஏஜென்டாக உள்ளனர். கர்நாடக தேர்தலுக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் 500 கோடி ரூபாயை கர்நாடக மக்களுக்குக்காக கொடுத்துள்ளனர்” என்றார்.

Advertisement:
[X] Close